Friday, January 29, 2010

குழந்தை

பஞ்சுமெத்தை மேடையில்
படுக்கையறை மொழிகளில்
உன்னால் அடித்தளமிடப்ப்ட்டு
உன்னவள் எழுப்பிய பளிங்கு தேசம்
இதோ நீங்கள் கூட்டாய் வடித்த
முதல் கவிதை

காமம்

உடை தவிர்த்து
உடல் எழுதும் கவிதை
காமம்!!!

உலகமயமாக்கல்

நீர் கேட்டால் மோர் கொடுத்த
எங்கள் ஊரில்
நுழைந்தது உலகமயமாக்கல்
இப்போது தண்ணீர் பாட்டில் விலை
ருபாய் பதினைந்து!!!!!!!

தேர்தல்

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
இடையில் இடை தேர்தலிலும்
யாரோ ஒருவரை வெற்றி பெற வைத்து
நாம் எப்போதும் தோற்று போகிறோம்.

அவலம்

அங்கு துயரங்களை பகிர்ந்துகொள்ள
ஆள் இல்லாத பொழுது
இங்கு நாங்கள்
முத்தமிட்டுகொண்டிருந்தோம்.

ம(ண)ன மாற்றம்

யாரிடம் கற்றுக்கொண்டாய்
மௌனத்தை மனப்பாடம் செய்ய
எங்கே ஒத்திகை பார்த்தாய்
இந்த ஒட்டவைத்த புன்னகையை
வலிக்கிறது பெண்ணே
உன் வானவில் விழிகளில்
போலி சாயங்கள்

Wednesday, January 27, 2010

மேதாவிகள்

உலகில் இரண்டு வகை மேதாவிகள்
ஒன்று எல்லாம் எனக்கு தெரியும் என்கிற கிணற்று தவளைகள்!!
மற்றொன்று எல்லாம் நான் தான் என்கிற மத யானைகள் !!!

Saturday, January 23, 2010

காத்திருக்கிறேன் பதிலுக்காக

விரைவில் வந்து சேரும்
ஒரு அழகிய பூங்கொத்தும்
என் இனிய காதலும் !!

மாறி போன மனம்

அமெரிக்க பிம்பம் பிரதிபலித்து
ரசம் போன
இந்திய கண்ணாடிகள்  !!!!!!!